சாப்பாட்டு பெட்டிக்குள் ஓவியம்.

ஒக்ரோபர் 30, 2008

சாப்பாட்டு பெட்டிக்குள் ஓவியம் ஆனால் அது சாப்பாடு தான்………

Lunch-work

Lunch-work


Lunch-work

Lunch-work


Lunch-work

Lunch-work


Lunch-work

Lunch-work


Lunch-work

Lunch-work


Lunch-work

Lunch-work


Lunch-work

Lunch-work


Lunch-work

Lunch-work


Lunch-work

Lunch-work

Advertisements

உருளைக்கிழ‌ங்கு சீரக வறுவல்

ஜூலை 4, 2008

தேவையானப் பொருட்கள்.

உருளைக்கிழங்கு -‍ 3
சீரகம் – 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி -‍ 1/4 டீஸ்பூன்
பச்சைமிளகாய் ‍- 3 அல்லது 4
இஞ்சி ‍- ஒரு சிறு துண்டு
பூண்டு ‍- 4 அல்லது 5 பல்
கறிவேப்பிலை – சிறிது
எண்ணை – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு -‍ 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்ப‌

செய்முறை.

உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து, நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணையை விட்டு, சூடான பின் அதில் சீரகத்தைப் போடவும். சீரகம் பொரிந்தவுடன், நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு வதக்கவும். பின்னர் அதில் உருளைக்கிழ‌ங்கு துண்டங்களைப் போட்டு, அத்துடன் மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து, நன்றாகக் கிளறி, மூடி வைத்து சிறு தீயில் 2 அல்லது 3 நிமிடங்கள் வேகவிடவும்.

இது அதிக காரமில்லாமல் இருப்பதால், குழந்தைகளுக்குக் கொடுக்க ஏற்றது.

மேலும், இதை Baby potato என்று அழைக்கப்படும் சிறிய உருளைக்கிழங்கை வேகவைத்து, முழுதாக அப்படியே சேர்த்து செய்தால், பார்க்க அழகாகவும் இருக்கும்.


சர்க்கரைப்பொங்கல்

ஜூன் 9, 2008

தேவையானப் பொருட்கள்.

அரிசி – 1 கப்
வெல்லம் பொடி செய்தது – 2 கப்
நெய் – 1/4 கப்
முந்திரிப்பருப்பு – 5
காய்ந்த திராட்சை – 5
ஏலக்காய் – 4

செய்முறை.

அரிசியை நன்றாகக் கழுவி அதில் மூன்று கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் போட்டு, மூன்று அல்லது நான்கு விசில் வரும் வரை வேக வைக்கவும்.

வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு 1/2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். கொதி வந்ததும் கீழே இறக்கி வடிகட்டிக் கொள்ளவும்.

குக்கரை திறந்து சாதத்தை நன்றாக மசித்துக் கொள்ளவும். அதில் வெல்லப் பாகை விட்டு அடுப்பில் வைத்து நன்றாகக் கிளறவும். அடுப்பை சிறு தீயில் வைத்து, நெய்யை சேர்த்து மீண்டும் கிளறவும். சாதமும் பாகும் நன்றாகக் கலந்தபின், முந்திரி, திராட்சையை சிறிது நெய்யில் வறுத்து போடவும். ஏலக்காயைப் பொடி செய்து போடவும்.


தக்காளி தோசை

மே 26, 2008

தேவையானப் பொருட்கள்.

அரிசி மாவு – 1 கப்
ரவா – 1/2 கப்
தக்காளி – 2
மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
உப்பு – 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை – தேவைக்கேற்றவாறு

செய்முறை.

தக்காளியை பெரிதாக நறுக்கி மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

அரிசி மாவு, ரவா, தக்காளி விழுது, மிளகாய்த்தூள், பெருங்காயம், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, தேவையான அளவு தண்ணீரைச் சேர்த்து தோசை மாவு பதத்திற்குக் கரைத்துக் கொள்ளவும்.

தோசைக்கல்லை காயவைத்து, ஒரு பெரிய கரண்டி மாவை ஊற்றி, மெல்லிய தோசையாக பரப்பவும். ஒரு டீஸ்பூன் எண்ணையை தோசையை சுற்றி ஊற்றி நன்றாக வேகவிடவும். ஒரு பக்கம் வெந்தவுடன், திருப்பிப் போட்டு மறு பக்கமும் வெந்தவுடன் எடுக்கவும்.

குறிப்பு.

சாதாரண தோசை மாவிலும் இதை செய்யலாம். ஒரு கப் மாவிற்கு ஒரு தக்காளியை அரைத்து, மிளகாய்த்தூள், பெருங்காய்த்தூள் சேர்த்து செய்யவும்.


கண்ணாடியாலான ஆப்பிள் ஐ-போன் மையம்

மே 22, 2008
உலகளவில் பிரபலமடைந்துள்ள ஐ-போன் சாதன தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், முற்றிலும் கண்ணாடியால் கட்டப்பட்ட ஐ-போன் விற்பனை மையத்தை அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் திறந்துள்ளது.
பாஸ்டன் நகரின் போய்ல்ஸ்டன் வீதியில் இந்த வாரம் புதிய கண்ணாடி விற்பனை மையத்தை திறந்துள்ள ஆப்பிள் நிறுவனம், அமெரிக்காவிலேயே இதுதான் தங்களின் மிகப்பெரிய விற்பனைக் கூடம் என்றும் தெரிவித்துள்ளது.
மொத்தம் 3 மாடிகளைக் கொண்ட இந்த விற்பனைக் கூடம், 21 ஆயிரத்து 350 சதுரடி பரப்பில் கட்டப்பட்டுள்ளது. இதில் முதல் மாடியில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-மேக், மேக்புக் உள்ளிட்ட கணினிகள் விற்பனை செய்யப்படுகின்றன. 2வது தளத்தில் ஐ-பாட், ஐ-போன்கள் விற்பனையும், 3வது தளத்தில் சேவை மையமும் இயங்குகிறது.
இந்த புதிய விற்பனை மையம் திறந்ததன் மூலம் ஆப்பிள் நிறுவன மையங்களின் சர்வதேச எண்ணிக்கை 210 ஆக உயர்ந்துள்ளது. இதில் அமெரிக்காவில் 183 மையங்களும், இங்கிலாந்தில் 15ம், ஜப்பானில் 7ம், கனடாவில் 4ம் மற்றும் இத்தாலியில் ஒரு விற்பனை மையமும் செயல்பட்டு வருவதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.