நல்லூர் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

ஓகஸ்ட் 6, 2008

நல்லூர்க் கந்தசாமி கோவிலின் மஹோற்சவம் இன்று 06ஆம் திகதி புதன்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.தொடர்ந்து 25 தினங்கள் திருவிழா நடைபெறும்.

உற்சவ தினங்களில் வழமைபோல் அடி யார்கள் பக்திபூர்வமாக கலந்து முருகப் பெருமானை வழிபடுவதுடன் அங்கபிரதட்சை செய்வதும் அடி அழித்தும் கற்பூரச் சட்டி எடுத்தும் தூக்குகாவடி, ஆட்டக்காவடி எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடன்களை நிறை வேற்றுவார்கள். வழமைபோல் இம்முறையும் உற்சவ தினங்களில் குடாநாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக் கான அடியார்கள் ஆலயத்துக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisements