Web 2.0 Vs Web 3.0

ஜூன் 25, 2008
யானைகள்….!

ஜூன் 16, 2008

யானை என்ற பெயரைக் கேட்டதும் உங்கள் மனதில் என்ன மாதிரியான எண்ணங்கள் தோன்றும்?
ஒரு கருத்த பெரிய உருவம்…?
பெரிய காதுகள்…?
அமைதியான சைவம் மட்டுமே உண்ணும் விலங்கு…?

ஆனால் எனக்கு யானை எனும் பொழுது இலங்கை,கண்டி எனும் நகரில் கொண்டாடப்படும் பெரஹரா ஊர்வலம்(திருவிழா)நினைவுக்கு வருகிறது.20க்கும் மேற்பட்ட யானைகள் அழகான பட்டு,ஆபரணங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு புத்தரின் புனிதப்பல் பாதுகாக்கப்படும் கண்டி தலதா மாளிகையிலிருந்து அதனை எடுத்துக்கொண்டு நள்ளிரவில் நகரவீதியில் உலாவரும்.ஏறத்தாழ 100 கிலோமீற்றர்கள் நடைப்பவனி.

இந்த யானைகளுடன் அவற்றுக்கு மட்டுமே பழக்கமான பாகன் அங்குசத்தோடு வருவதோடு முன்னாலும் பின்னாலும் கண்டியன் டான்ஸர்ஸ் என்றழைக்கப்படும் கண்டி பாரம்பரிய நடனக்கலைஞர்கள் ஆடியபடியும்,சிலம்பம் சுற்றியபடியும் வருவார்கள்.பார்க்க மிகவும் அழகாக இருக்கும்.இதனைப் பார்க்கவென்றே வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் இந்தப் பெரஹரா நடக்கும் காலப்பகுதியில் இலங்கைக்கு வருவதுண்டு.

இந்த யானைகளின் ஊர்வலம் பார்க்கவென்றே நிறைய ஊர்களிலிருந்தும் மக்கள் வந்து இவ் ஊர்வலம் செல்லும் வீதிகளின் இருமருங்கிலும் மாலை 6 மணியிலிருந்தே மக்கள் பாய்,படுக்கைகளுடன் காத்திருப்பார்கள்.இவ்வூர்வலத்தைப் பார்ப்பது புண்ணியத்தைத் தரும் என்ற நம்பிக்கை சிங்கள மக்களிடையே உள்ளதால் மிகவும் வயது முதிர்ந்தவர்களிலிருந்து சிறுகுழந்தைகள் வரை வீதியோரத்திலிருப்பார்கள்.சில்லறை வியாபாரிகளும் அன்று நல்ல வருமானம்.ஆனால் ஆட்டத்தின் கதாநாயகர்களான யானைகள்?

மணியோசை எழும்ப ஊர்வலத்தில் ஆடியாடிவரும் அவற்றின் அருகே போய் பார்க்க வேண்டும்.அவற்றின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடுவதைக் காணலாம்.100 KM என்றால் சும்மாவா? அதுவும் ஒரு உயிர்தானே? உணவுகள் வழங்கப்பட்டிருக்கும்.ஆனாலும் உடல் அசதி அவற்றுக்கும் இருக்கும் தானே?

இது தவிர்த்து இலங்கைக்கு சுற்றுலாப்பயணிகளை ஈர்க்குமொரு விலங்காக யானை உள்ளது.அவர்களுக்காகவென்றே யானைகளைப் பல வழிகளிலும் பழக்கப்படுத்தியுள்ளார்கள்.

நாட்டின் காட்டுப்பகுதியை அண்டிய ஊர்களில் காட்டு யானைகள் வழிதவறி ஊருக்குள் வந்து சிலநேரம் தனக்கேற்படும் அச்சத்தால் ஊரையும்,காணும் எல்லாவற்றையும் துவம்சம் செய்துவிட்டுப் போவதுண்டு.அது போன்ற சந்தர்ப்பத்தில் அவற்றை அடக்குவது மிகவும் சிரமமாக இருக்கும்.ஒன்று அதுவே அடங்கி காட்டுக்குப் போக விட்டுவிடுவார்கள்.அது போகாமல் தொடர்ந்தும் மிகப்பெரிய அழிவுகளை ஏற்படுத்துமிடத்து அதனை மயங்கவைக்கும் ஊசி துப்பாக்கி போன்ற கருவியால் போடப்பட்டு அது மயங்கிய பிறகு யானைகள் சரணாலத்துக்கு அந்த யானை அனுப்பிவைக்கப்படும்.

இந்த யானையின் அட்டகாசத்தைப் பாருங்கள்.

பயனுள்ள பதிவு.

நன்றி : சிந்திக்கச் சில படங்கள்


ஏன் நான் Mozilla Firefox காதலிக்கிறேன்?

ஜூன் 15, 2008

என் காதலி என்னைப் பார்த்து “ஏன் நீ என்னைக் காதலிக்கிறாய்?” எனக் கேட்டால், காரணங்களை அடுக்கிக் கொண்டே போவேனல்லவா. அவ்வாறே Mozilla Firefox நான் காதலிக்க ஆயிரம் காரணங்களுண்டு.

பயர்பாக்ஸின் நீட்சிகள் தரும் சந்தோசமும், இலகுத்தன்மையும் மற்றும் தேவையான செயற்பாடுகளும் அவற்றுள் சில. உதாரணத்திற்கு கீழே இரண்டு படங்கள். படங்களே பேசும் நான் ஒன்றும் சொல்வதாயில்லை.

(படங்களின் மேல் சொடுக்கி பெரிதாக்கிப் பாருங்கள்)

இது நீட்சிகளால் நிறைந்த Firefox

இது வலஞ்சொடுக்கலில் வரும் செயற்பாடுகள்

இது பயர்பாக்ஸ் 1.5 இலிருந்து எடுக்கப்பட்ட படம். இப்போது பயர்பாக்ஸ் 3 வெளியிடப்படவிருக்கிறது என்பதுடன் இதில் மேலும் அதிக பயன்கள் உள்ளன.


இங்கிருந்தால் இவரும் கடவுளாயிருக்கலாம்……..?

ஜூன் 14, 2008

வீதியில் சாகசம் நிகழ்த்திக்காட்டும் இவர் அந்தரத்தில் நிற்கும் காட்சிகளை காணுங்கள்… வெறும்விபூதி குளிகை வித்தையைகாட்டுபவர்களே கடவுளாகும்போது இவர் அவர்களுக்கும் மேல் கடவுளாகலாம்…

இச்சாகசங்களுக்கு பின்னாலிருக்கும் தந்திரம் என்னவென்று அடுத்த பதிவில் தருகிறேன். அதற்கு முன் முடிந்தால் கண்டுபிடியுங்கள்…


நாசாவில் ஆர்&டி மையம் அமைக்கிறது கூகிள்

ஜூன் 13, 2008

பிரபல தேடுபொறி (Search Engine) தளமான கூகிள் இணையத்தை நடத்தி வரும் கூகிள் நிறுவனம், நாசாவின் அலுவலகத்தில் தனது புதிய ஆய்வு மற்றும் மேம்பாட்டு (ஆர்&டி) மையத்தை அமைக்க உள்ளது.
இதற்காக அமெரிக்காவின் மவுண்டன் வியூ பகுதியில் உள்ள நாசாவின் ஏமீஸ் ஆய்வு மையத்தில் உள்ள 42.2 ஏக்கர் இடத்தை அடுத்த 90 ஆண்டுகளுக்கு கூகிள் நிறுவனம் வாடகைக்கு வாங்கியுள்ளது.
அந்த இடத்திற்கு வாடகையாக கூகிள் சார்பில் 3.66 மில்லியன் டாலர் வழங்கப்படும் என்றும், வரும் 2013ம் ஆண்டு இந்த ஆர்&டி மையம் கட்டும் பணி துவக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொத்தம் 12 மில்லியன் சதுரடி பரப்பளவில் கட்டப்பட உள்ள இந்த மையத்தில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான பணியாளர்கள் பணியாற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


சர்க்கரைப்பொங்கல்

ஜூன் 9, 2008

தேவையானப் பொருட்கள்.

அரிசி – 1 கப்
வெல்லம் பொடி செய்தது – 2 கப்
நெய் – 1/4 கப்
முந்திரிப்பருப்பு – 5
காய்ந்த திராட்சை – 5
ஏலக்காய் – 4

செய்முறை.

அரிசியை நன்றாகக் கழுவி அதில் மூன்று கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் போட்டு, மூன்று அல்லது நான்கு விசில் வரும் வரை வேக வைக்கவும்.

வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு 1/2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். கொதி வந்ததும் கீழே இறக்கி வடிகட்டிக் கொள்ளவும்.

குக்கரை திறந்து சாதத்தை நன்றாக மசித்துக் கொள்ளவும். அதில் வெல்லப் பாகை விட்டு அடுப்பில் வைத்து நன்றாகக் கிளறவும். அடுப்பை சிறு தீயில் வைத்து, நெய்யை சேர்த்து மீண்டும் கிளறவும். சாதமும் பாகும் நன்றாகக் கலந்தபின், முந்திரி, திராட்சையை சிறிது நெய்யில் வறுத்து போடவும். ஏலக்காயைப் பொடி செய்து போடவும்.


சேந்தா மட்டும் பணம் வராதுங்க…

ஜூன் 6, 2008

நான் நேற்று இணையத்தில பணம் பண்ணுறது பற்றி இங்க சொல்லியிருந்தன். அதுக்கு பிறகு செந்தழல் அண்ணை வந்து வேற சில நல்ல தளங்களின்ர முகவரியும் தந்திருந்தார். சரி அங்கெல்லாம் போய் சேந்தாச்சு. (சேரக்க உங்கட திறமைகளையும் சரியா குறிப்பிட மறக்காதயுங்கோ). எங்க காசை காணேல்ல வேலை தேடி வரேல்ல எண்டு நினைக்கிறியளோ. போய் ஏலத்தில கலந்துகொள்ளுங்கப்பா. சேந்தாக்கள் ஒருத்தருமே இதுவரைக்கும் ஒரு ஏலத்திலயும் கலந்துகொள்ளேல்ல. ஒரு மாசத்துக்கு 16 ஏலத்தில நீங்கள் பங்குகொள்ள முடியும்.

இதுவரைக்கும் போய் சேராதாக்கள் கீழ சொடுக்கி போய் சேருங்கப்பா..