இதனைத் தடுக்க ஏதாவது செய்யுங்கள் நண்பர்களே !

நோர்வே,கனடா போன்ற நாடுகளில் ஒருவகையான புதுவிதமான உல்லாசப்பயணங்கள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அப்பயணங்களை மேற்கொள்வோர் அதனை வீர விளையாட்டு என்றழைக்கிறார்கள்.அவை உண்மையில் வீர விளையாட்டா இல்லை கோர வேட்டையா?

இனிப்படங்கள் பேசட்டும்…

நாங்கள் ‘சீல்’எனப்படும் கடற்பாலூட்டி விலங்குகள்.
குறிப்பிட்ட ஒரே இடத்தில் ஓய்வெடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளதோடு பொதுவாக இவ்விடங்கள், எங்களைக் கொன்று தின்னும் விலங்குகள் நெருங்கமுடியாததாகவும் நாங்கள் உண்பதற்கு மீன் கிடைக்கக் கூடிய இடமாகவும் இருக்கும்.
எமது ஆங்கிலப்பெயர் போக்கா விட்டுலினா(Phoca vitulina)

உங்களது வீரவிளையாட்டு வீரர்கள் எம்மை நெருங்குகிறார்கள்.

எங்களிடம் ஆயுதங்கள் இல்லை.உங்களை எதிர்த்திடவோ,விலக்கிடவோ எங்களிடம் எந்தப் பலமோ அன்றியும் உயிர்ப்பிச்சை கேட்டு மன்றாடிட வாய்மொழி கூடவோ இல்லை.ஆனாலும் நீங்கள் எங்களைக் கொல்கிறீர்கள்.
எதிர்ப்பின் ஒரு துளி கூடக் காட்டத் தெரியாத ஜீவன்களிடம் நீங்கள் உங்கள் வீரத்தைக் காட்டுகிறீர்கள்.

நீங்கள்தான் வீரர்களா?
எங்களை அழித்திடும் உரிமையை உங்களுக்குத் தந்தவர் யார்?
எங்கள் இனத்தின் வாழ்வையும் இறப்பையும் தீர்மானிக்கும் நாட்களை எந்த விதிகளின் கீழ்ப்பெற்றுக் கொண்டீர்?

இதுதானா உங்கள் விளையாட்டு?
நாங்கள் உங்களுக்கு எதுவிதத் தீங்கைக் கொண்டும் தீர்ப்பெழுதவில்லையே…?
எமது நிலங்களில் நீச்சலடித்து விளையாடிக் கொண்டிருப்பதைத் தவிர எதையும் நாம் அறியாதவர்களாக இருக்கிறோம்.

எங்களுக்குத் தெரியும்.
இதனைப் படிக்கும் ஈர இதயமுள்ளவர்களுக்கு விழிகசியச் செய்யும் நிகழ்வு இது.

ஏதாவது செய்யுங்கள் நண்பர்களே.
எங்கள் உலகினை எங்களுக்கு மீட்டுத் தாருங்கள்.

Advertisements

One Response to இதனைத் தடுக்க ஏதாவது செய்யுங்கள் நண்பர்களே !

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: