Dasavatharam Crew Interview

ஏப்ரல் 26, 2008
Advertisements

Dasavatharam MP3 Songs

ஏப்ரல் 26, 2008

Oh…Ho…Sanam

Kallai Mattum

Kaa…Karuppanukkum

Mukundha Mukundha

Oh…Ho…Sanam (Remix)

Ulaga Nayagan


போட்டோ ஸ்கிரீன்சேவர்

ஏப்ரல் 25, 2008

டிஜிட்டல் கேமரா மூலம் சுடப்பட்ட ஒளிப்படங்களை ஒரே சொடுக்கில் உங்கள் கணிணியின் வால்பேப்பராக்க இன்றைய கணிணிகள் வசதிகொண்டுள்ளன.எந்த படத்தையும் வலது சொடுக்கினால் “Set as Desktop Background” வசதி அப்படத்தை உங்கள் கணிணியின் பிண்ணணி (Wallpaper) படமாக்கும்.

ஆனால் உங்களின் கெனான் ஒளிப்படக்கருவி மின்னி மின்னி உள்வாங்கிய உங்கள் குழந்தையின் புன்னகை படங்களை உங்களின் ஸ்கிரீன்சேவராய் உங்கள் கணிணியில் ஓட விடுவது எப்படி?

கூகிள் வழங்கும் இலவச மென்பொருளான பிக்காசா உங்களிடம் இருந்தால் அது இதுமாதிரி தெரிவுசெய்யப்பட்ட படங்களை உங்கள் கணிணியில் ஸ்கிரீன்சேவராய் ஓட விட வசதியளிக்கின்றது. ஆனால் இன்னும் கொஞ்சம் அதிகமாய் வசதி வாய்ப்புகளோடு .scr வடிவில் உங்கள் குடும்ப படங்களை ஸ்கிரீன்சேவராக்க இதோ ஒரு இலவச மென்பொருள். அதன் பெயர் PhotoMeister. இதனைபயன் படுத்தி நீங்கள் உருவாக்கும் Screensaver-க்கு பலவித எஃபெக்ட்கள் கொடுக்கலாம், போட்டோ தலைப்புகள் போட்டுக்கொள்ளலாம், பிண்ணணியில் இசையை ஓட விடலாம், இப்படி பல கிமிக்ஸ்கள் செய்யலாம். கணிணியும் உங்கள் குதுகல குடும்பத்தை எதிரொளித்துக்கொண்டே இருக்கும்.


சீனாவில் உலகின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப மையம்

ஏப்ரல் 19, 2008

தகவல் தொழில்நுட்ப மென்பொருள் ஏற்றுமதித் துறையில் இந்தியாவிற்கு சவாலாகும் மாபெரும் இலக்குடன் சீனா களமிறங்கியுள்ளது.

அந்த நாட்டின் வடகிழக்கு மாகாணமான லயோனிங்கில் உள்ள டாலியான் என்ற கடற்கரை நகரில் உலகின் மிகப்பெரிய மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப மையம் ஒன்றின் கட்டுமானப் பணியை சீனா துவக்கியுள்ளது.

இது சீனாவின் வெறும் சிலிகான் பள்ளத்தாக்கு மட்டுமல்ல. முதல் தர பணிச் சூழலுடன் கூடிய தகவல் தொழில்நுட்ப நகரம் என்று டாலியான் நகர மேயர் பெருமையுடன் கூறுகிறார். இந்த மையம் 40 கி.மீ பரப்பளவில் கட்டப்படுவதுதான் இதன் சிறப்பம்சம்.

லியான் டியான்டி தகவல் தொழில்நுட்ப மையத்தை உருவாக்க 15 பில்லியன் யுவான்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த முதலீடுகளை சீன மற்றும் ஹாங்காங் நிறுவனங்கள் சேர்ந்து செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மையத்தை உருவாக்குவதன் மூலம் 2012 ஆம் ஆண்டு வாக்கில் நாட்டின் ஒட்டு மொத்த மென்பொருள் ஏற்றுமதியை 3.5 பில்லியன் டாலர்களாக உயர்த்த திட்டமிட்டு வருகிறது. இது தற்போது செய்யப்படும் ஏற்றுமதியைக் காட்டிலும் மும்மடங்கு அதிகமாகும்.

மென்பொருள் மையமாக உருவாக்கப்படவுள்ள இந்த துணை நகரத்தில் உண்மையில் அலுவலக கட்டிடங்கள், குடியிருப்பு வசதிகள், கல்வி மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் ஆகியவையும் இடம்பெறும் என்று இந்த கட்டுமானப் பணிக்கு முதலீடு செய்து வரும் ஹாங்காங் நிறுவனமான ஷூய் ஒன் குழுமத் தலைவர் வின்சென்ட் லோ தெரிவித்தார்.

தரைத் தளப் பரப்பளவு மட்டும் 4 மில்லியன் சதுர மீட்டர்கள் கொண்ட இந்த கட்டுமானப்பணி முடிய 7 முதல் 10 ஆண்டுகள் தேவைப்படும் என்று தெரிகிறது.

முதல் கட்ட நடவடிக்கைகள் ஜப்பான் மற்றும் கொரிய நிறுவனங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதாக அமையவுள்ளது. ஆனால் முக்கிய இலக்கு ஐ.பி.எம் மற்றும் ஆரக்கிள் ஆகிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தேவைகளை மேம்படுத்துவதாய் இருக்கும் என்று தெரிகிறது.

வடகிழக்கு ஆசியாவிலேயே முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை மற்றும் ஏற்றுமதி மையமாக இந்த டாலியான் மையம் திகழும் என்று சீன தகவல் தொழில் நுட்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான இன்டெல், டாலியான் நகரில் 2.5 பில்லியன் டாலர்கள் செலவில் வேஃபர் ஃபேப்ரிகேஷன் மையம் (Wafer Fabrications Facility) ஒன்றை கட்டுவதற்கான பணியை ஏற்கனவே துவங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டாலியானில் சத்யம் நிறுவனத்திற்கு ஏற்கனவே மையம் உள்ளது. தற்போது ஹெச்.சி.எல். நிறுவனம் ஒரு மையத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

மென்பொருள் ஏற்றுமதித் துறையில் இந்தியாவின் சவாலை சமாளிக்க சீனா வரிந்து கட்டி களமிறங்கியுள்ளது. இந்தியாவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டியதுதான்


உலகின் மிக மெல்லிய லேப் டாப்.

ஏப்ரல் 19, 2008

உலகின் மிக மெல்லிய மடிக்கணினியை ஆப்பிள் நிறுவனம் கடந்த வாரம் அறிமுகப்படுத்தியது. இந்த மடிக்கணினியின் அதிகபட்ச தடிமன் 1.93 செண்டி மீட்டர்கள் எனவும், மிக மெல்லிய பாகம் 0.41 செண்டி மீட்டர் அளவு எனவும் இதை அறிமுகம் செய்து வைத்த ஆப்பிள் நிறுவனம்  அறிவித்துள்ளது.

மிக மெல்லியதாக இருந்தாலும் மிகவும் சக்தி வாய்ந்த கணினியாய் இது செயல்படும் என்கின்றனர். இதில் குறுந்தகடுகளைப் பயன்படுத்தும் வசதி இல்லை. எனினும் பிற கணினியில் உள்ள குறுந்தகடு செயலிகளை கம்பியில்லா தொடர்பின் மூலம் இயக்கும் ஆற்றல் இந்த கணினிக்கு உள்ளதாம்.

இந்த மடிக்கணினியின் மொத்த எடையே 1.36 கிலோ கிராம் என்பது குறிப்பிடத் தக்கது. தற்போது $1800 என இதன் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விலை அதிகம் என நினைப்பவர்கள் ஓரிரு ஆண்டுகள் பொறுத்திருக்க வேண்டியது தான்.