Happy 52nd Birthday, Maharaji!

December 10, 2009

சிந்தனைக்கு விருந்து. 03

அக்டோபர் 6, 2009

இப்படியும் ஒரு கணினி வடிவமைப்பா?…

ஆகஸ்ட் 12, 2008

புதுசு கண்ணா புதுசு!









பணம்சம்பாதிப்பது எப்படி?

ஜூலை 31, 2008

உங்களிடம் இணைய தளம் உள்ளதா?…..

இருந்தால் வாங்க கொஞ்சம் உழைக்கலாம். கீழ இருக்கிற படத்தின் மேல சொடுக்கி ஒரு கணக்கு ஒன்றை உருவாக்கி கொள்ளுங்க.பிறகு விளம்பரத்தை உங்கள் இணையத்தில் இணைக்கவும்.வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடியும்.


Web 2.0 Vs Web 3.0

ஜூன் 25, 2008




நாசாவில் ஆர்&டி மையம் அமைக்கிறது கூகிள்

ஜூன் 13, 2008

பிரபல தேடுபொறி (Search Engine) தளமான கூகிள் இணையத்தை நடத்தி வரும் கூகிள் நிறுவனம், நாசாவின் அலுவலகத்தில் தனது புதிய ஆய்வு மற்றும் மேம்பாட்டு (ஆர்&டி) மையத்தை அமைக்க உள்ளது.
இதற்காக அமெரிக்காவின் மவுண்டன் வியூ பகுதியில் உள்ள நாசாவின் ஏமீஸ் ஆய்வு மையத்தில் உள்ள 42.2 ஏக்கர் இடத்தை அடுத்த 90 ஆண்டுகளுக்கு கூகிள் நிறுவனம் வாடகைக்கு வாங்கியுள்ளது.
அந்த இடத்திற்கு வாடகையாக கூகிள் சார்பில் 3.66 மில்லியன் டாலர் வழங்கப்படும் என்றும், வரும் 2013ம் ஆண்டு இந்த ஆர்&டி மையம் கட்டும் பணி துவக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொத்தம் 12 மில்லியன் சதுரடி பரப்பளவில் கட்டப்பட உள்ள இந்த மையத்தில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான பணியாளர்கள் பணியாற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதனைத் தடுக்க ஏதாவது செய்யுங்கள் நண்பர்களே !

மே 19, 2008

நோர்வே,கனடா போன்ற நாடுகளில் ஒருவகையான புதுவிதமான உல்லாசப்பயணங்கள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அப்பயணங்களை மேற்கொள்வோர் அதனை வீர விளையாட்டு என்றழைக்கிறார்கள்.அவை உண்மையில் வீர விளையாட்டா இல்லை கோர வேட்டையா?

இனிப்படங்கள் பேசட்டும்…

நாங்கள் ‘சீல்’எனப்படும் கடற்பாலூட்டி விலங்குகள்.
குறிப்பிட்ட ஒரே இடத்தில் ஓய்வெடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளதோடு பொதுவாக இவ்விடங்கள், எங்களைக் கொன்று தின்னும் விலங்குகள் நெருங்கமுடியாததாகவும் நாங்கள் உண்பதற்கு மீன் கிடைக்கக் கூடிய இடமாகவும் இருக்கும்.
எமது ஆங்கிலப்பெயர் போக்கா விட்டுலினா(Phoca vitulina)

உங்களது வீரவிளையாட்டு வீரர்கள் எம்மை நெருங்குகிறார்கள்.

எங்களிடம் ஆயுதங்கள் இல்லை.உங்களை எதிர்த்திடவோ,விலக்கிடவோ எங்களிடம் எந்தப் பலமோ அன்றியும் உயிர்ப்பிச்சை கேட்டு மன்றாடிட வாய்மொழி கூடவோ இல்லை.ஆனாலும் நீங்கள் எங்களைக் கொல்கிறீர்கள்.
எதிர்ப்பின் ஒரு துளி கூடக் காட்டத் தெரியாத ஜீவன்களிடம் நீங்கள் உங்கள் வீரத்தைக் காட்டுகிறீர்கள்.

நீங்கள்தான் வீரர்களா?
எங்களை அழித்திடும் உரிமையை உங்களுக்குத் தந்தவர் யார்?
எங்கள் இனத்தின் வாழ்வையும் இறப்பையும் தீர்மானிக்கும் நாட்களை எந்த விதிகளின் கீழ்ப்பெற்றுக் கொண்டீர்?

இதுதானா உங்கள் விளையாட்டு?
நாங்கள் உங்களுக்கு எதுவிதத் தீங்கைக் கொண்டும் தீர்ப்பெழுதவில்லையே…?
எமது நிலங்களில் நீச்சலடித்து விளையாடிக் கொண்டிருப்பதைத் தவிர எதையும் நாம் அறியாதவர்களாக இருக்கிறோம்.

எங்களுக்குத் தெரியும்.
இதனைப் படிக்கும் ஈர இதயமுள்ளவர்களுக்கு விழிகசியச் செய்யும் நிகழ்வு இது.

ஏதாவது செய்யுங்கள் நண்பர்களே.
எங்கள் உலகினை எங்களுக்கு மீட்டுத் தாருங்கள்.


போட்டோஷாப் மென்னூல் (இலவசம்)

மே 17, 2008

சைட்பாய்ண்ட் வழங்கும் போட்டோஷாப் மென்னூல் (இலவசம்)

உங்களது மின்னஞ்சல் முகவரியை மாத்திரம் உள்ளிட்டு இந்த மென்னூலை சைட்பாய்ண்ட் தளத்திலிருந்து இலவசமாகப் பெறலாம். எந்தவிதமான காப்பிரைட் சட்டச்சிக்கல்களும் இல்லை.

270 பக்கங்கள் கொண்ட மென்னூல் இது.
உயர்தரப் படங்களுடன் கூடிய புத்தகம் 64 எம்பி.
சாதாரணப் படங்களுடன் கூடிய புத்தகம் 23 எம்பி.

http://photoshop.aws.sitepoint.com/


தோலுடன் அப்பிள் பழம் சாப்பிடும் முன்பு இதனைக் கொஞ்சம் பாருங்கள்

மே 16, 2008

இப்பொழுதெல்லாம் கடைகளில்,சந்தைகளில் விற்கப்படும் அப்பிள் பழங்கள் மிகப் பளபளப்பாகவும்,புதிதாகவும் காட்சியளிக்கின்றன.
எடுத்தவுடனேயே தோலுடனேயே சாப்பிட்டு விடுகிறோம்.இந்தப் படங்களைக் கொஞ்சம் பாருங்கள்.

இவை மெழுகு தடவப்பட்டவை.இந்த மெழுகுதான் பளபளப்புக்குக் காரணமாவதோடு பழம் அழுகாமல் நீண்ட நாட்கள் பாதுகாக்கவும் உதவுகிறது.
பற்றீரியாத் தொடர்பை விட்டும் பழத்தைப் பாதுகாக்கவே இம்மெழுகு தடவப்படுவதாக விற்பனையாளர்கள் கூறுகின்றார்கள்.எனினும் இவை உடலுக்குத் தீங்கானவை தானே..!
அப்பிள் பழம் மட்டும்தான் என்றில்லை.நிறையப் பழங்களில் இந்த நடவடிக்கை உள்ளன.எனவே சாப்பிட முன்பு ஒரு கணம் சிந்திப்போம்.முடிந்தால் தோல் நீக்கி உண்போம்.


ஐ-பொட் / செல்பேசிகளைத் தண்ணீரில் நனைத்தவர்களுக்காக…!

மே 13, 2008

செல்பேசிகளைத் தண்ணீரில் நனைத்த அனுபவம் நிறையப் பேருக்கு உண்டு. தானாகவே யாரும் நனைக்கமாட்டோம். எனினும் எதிர்பாராதவிதமாக இது நடந்துவிட்டிருக்கும். அப்போது என்ன செய்யலாம்?

  • முதலில் செல்பேசியின் மின்னினைப்பைத் துண்டிக்கவும்.
  • செல்போனை நன்றாக ஒரு உறையிலிடவும்.
  • ஒரு கிண்ணம் முழுவதும் ‘அரிசி’ யை எடுத்துக்கொள்ளவும். அரிசியானது ஈரப்பதத்தை முழுவதும் உறிஞ்சக்கூடிய ஒரு பொருளாகும். (சமைக்கப்படாத அரிசி மட்டுமே இந்தச் செய்முறைக்கு உதவும்)
  • உறையிலிட்ட செல்பேசி / ஐ-பொட் ஐ இந்தக் கிண்ணத்தில் உள்ள அரிசிக்குள் 24 மணிநேரம் வைத்திருக்கவும்.

  • செல்பேசி / ஐ-பொட்டின் – மின்கலங்களை (பேட்டரி) தனியாக வேறொரு அரிசிக்கிண்ணத்தில் வைப்பது உத்தமம்.
  • ஒட்டுமொத்த ஈரப்பதமும் துப்புறவாக உலர்வதற்கு 24 மணிநேரமாவது தேவைப்படும்.
  • அடுத்த நாள் உங்களது தண்ணீரால் நனைக்கப்பட்ட கருவி அற்புதமாக வேலை செய்ய ஆரம்பித்துவிடும்.

Follow

Get every new post delivered to your Inbox.