இன்றைய கணினி உலகில் இன்டர்நெட் புரோட்டகால் அல்லது ஐ.பி. என்பது பற்றி நாம் அதிகம் கேள்விப்படுகிறோம். ஒவ்வொரு கணினியும் ஒரு தனித்த நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டிருக்கும். இதுதான் ஐ.பி. என்று வழங்கப்படுகிறது.
நெட்வொர்க்கில் இருக்கும் எந்த ஒரு கணினியையும் சுலபமாக அடையாளப்படுத்தும் ஐ.பி. முகவரி என்பது எண்களாலானது. அலுவலக நெட்வொர்க், இணையதள நெட்வொர்க் அல்லது வீடு என்று கணினி எங்கு இருந்தாலும் ஒவ்வொன்றிற்கும் ஒரு தனித்த ஐ.பி.முகவரி உண்டு.
ஐ.பி. முகவரியில் 4 செட் எண்கள் இருக்கும். உதாரணமாக 192.168.100.111 என்று இருக்கும். டொமைன் பெயர்கள் என்று அழைக்கப்படும் www..—–.காம் என்பது ஒரு குறிப்பிட்ட ஐ.பி. முகவரியுடன் தொடர்புடையதே.
ஐ.பி. முகவரிகளில் மாறும் மற்றும் மாறாத முகவரிகள் இரண்டும் உள்ளது. அதாவது முன்னணி இணையதளங்கள் இதுபோன்ற மாறாத ஐ.பி. முகவரிகளை பயன்படுத்தும். மாறும் ஐ.பி. என்பது நீங்கள் எந்த ஒரு கணினியில் லாக் ஆன் செய்யும்போதும் அந்த கணினிக்கு தானாகவே வழங்கப்படும் ஐ.பி.முகவரி. பிரவுசிங் சென்டர் உள்ளிட்ட இணையதள வழங்கு சேவைதாரர்கள் இந்த டைனமிக் ஐ.பி.முகவரிகளை பயன்படுத்துவார்கள்.
உள் மற்றும் வெளி ஐ.பி. முகவரிகள்:
அதாவது வெளி உலகிற்கு தெரியாத ஐ.பி.முகவரிகள் உள் ஐ.பி. முகவரியாகும். வீடு மற்றும் சொந்த அலுவலக உபயோகக் கணினிகள் இந்த உள் ஐ.பி. முகவரி கொண்டது. அதாவது ஒரே நெட்வொர்க்கில் உள்ள இரு கணினிகளில் உரையாடல் மேற்கொண்டால் அது ஒரே ஐ.பி.முகவரியில் நடந்த உரையாடலே.
உங்கள் உள் ஐ.பி. முகவரியைத் தெரிந்து கொள்ள, விண்டோஸ் ஸ்டார்ட் மெனுவை திறக்கவும். ரன் என்பதை செலெக்ட் செய்யவும். விண்டோஸ் விஸ்தாவில் ஆர் என்ற விசையை அழுத்தினால் போதுமானது. ரன் உரையாடல் பெட்டி திறக்கும். அதில் சி எம் டி என்று ஆங்கிலத்தில் தொடர்ச்சியாக டைப் செய்யவும் பிறகு என்டர் தட்டவும். இப்போது டி.ஓ.எஸ். கட்டளை திறக்கும்.
இப்போது கமாண்டிலிருந்து “ஐ.பி.கான்ஃபிக்” என்று டைப் செய்து என்டர் தட்டவும். உடனே அதில் உங்கள் ஐ.பி. முகவரியை நீங்கள் காணலாம். இப்போது கமாண்ட் விண்டோவில் எக்சிட் என்று டைப் செய்து என்டர் தட்டினால் அது மறைந்து விடும்.
உங்கள் கண்னி ஐ.பி. முகவரியை தானாகவே பெறுமாறு வடிவமைக்கப்பட்டிருந்தால், ஐ.பி. எண் காலத்திற்கு காலம் மாறும். குறிப்பாக ஒரு நெட்வொர்க்கிலிருந்து நீங்கள் அடுத்த நெட்வொர்க்கிற்கு மாற்றும்போது ஐ.பி. முகவரி மாறும்.
வெளி ஐ.பி. முகவரி ஒன்றும் உங்கள் கணினிக்கு வழங்கப்பட்டிருக்கும். இதனை உங்கள் இணையதள இணைப்புச் சேவை வழங்குவோர் அளிப்பர்.
ஐ.பி. முகவரி என்பது ஒன்றும் பெரிய ரகசியமல்ல. இணையதளங்கள் உங்களுக்குக் சேவை வழங்குவோர் மற்றும் பிறர் வேண்டுமானால் உங்கள் ஐ.பி. முகவரி என்னவென்று தெரிந்து கொள்ளமுடியும். இதன்மூலம் சிலவற்றை நீங்கள் அணுக முடியாதவாறு அவர்களால் செய்யமுடியும். இருப்பினும் உங்கள் ஐ.பி. முகவரியை நீங்கள் மறைத்தும் வைக்கலாம். க்ளோக்கிங் சேவைகள் பிராக்சி சர்வரை பயன்படுத்தி உங்கள் ஐ.பி. முகவரியை மறைத்து போலி ஐ.பி. முகவரியை தற்காலிகமாக உங்களுக்கு வழங்க முடியும்.
இந்த க்ளோக்கிங் சேவையை பயன்படுத்த அத்னை வழங்கும் இணையதளத்திற்கு சென்று அங்கு கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் நீங்கள் செல்ல விரும்பிய அந்த இணையதள முகவரியை டைப் செய்யவும்.
நீங்கள் “செல்” என்பதை கிளிக் செய்தவுடன் நீங்கள் செல்ல வேண்டிய இணையதளத்திற்கு கொண்டு செல்வதோடு, உங்கள் ஐ.பி. முகவரியையும் மறைத்து விடும். மேலும் உங்களது இந்த செய்கைகளுக்கு நீங்கள் எதிர்பார்க்கும் பாதுகாப்பையும் நிர்ணயம் செய்ய இது உதவும்.
Kadakam பதிப்பித்தது. 



















