இந்துவின் மைந்தர்களுக்கு ஓர் இனிய செய்தி
சொந்த வீட்டின் சுகம் எந்த வீட்டிலும் இல்லை அல்லவா?
சுகம் தர நாம் தயார் சுமந்திட நீங்கள் தயாரா?
எமது கற்பனை எமது செயல் எமது பதிவுகள்
நம்மோடு நாம் இருந்த காலம் எண்ணோடும் எழுத்தோடும் போனதல்ல
எல்லை தாண்டியும் எமை இணைத்திடும் இவ் இணையத்தளம்
ஆக்கங்கள் பதிவோம் அரட்டையும் பதிவோம்
அங்கங்கே அந்தரங்கமும் பதிவோம்
போட்டிகள் வைப்போம் நல்ல பரிசிலும் தருவோம்
புது யுகம் படைப்போம் புறப்படுவோம் இப்போதே
Jaffna Hindu College
http://www.ourjhc.com/space.php?uid=4
Jaffna Hindu College மாணவர்களுக்கு ஓர் இனிய செய்தி.!
ஜூன் 25, 2009உள்ளிருக்கும் உலகத்தை கண்டுகொள்ளுங்கள்.
மே 5, 2009“உண்மையான ஆனந்தம் சாதனைகளைப் பற்றியதல்ல, உங்கள் உள்ளேயே அமைதியைக் கண்டுகொள்வதைப் பற்றியது. கண்டுகொள்வதற்காக உள்நோக்கிச் செல்லும் இந்தப் பயணம்தான் எல்லா பயணங்களையும் விட மிக சிறந்த பயணம்.”
மகராஜி

மகராஜி
மகராஜி அவர்கள் தன் சிறுபிராயத்திலிருந்தே மக்களிடம் உள் அமைதியைப் பற்றி உரையாற்றி வருவதுடன் தனது பதிமூன்றாவது வயதில் அவர் சர்வதேச ரீதியில் பிரயாணம் செய்ய தொடங்கினார். அன்றுதொட்டு அவர் உலகெங்குமுள்ள ஆறரைகோடிக்கும் மேற்பட்ட மக்களிடம் உரையாற்றியுள்ளார். அவரின் உரைகளை பல்வேறு சாதனங்களின் வாயிலாக மலேசியா உட்பட 88-ற்கும் மேற்பட்ட நாடுகளில் பெற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது.
புதிய கண்டங்களைக் கண்டுபிடிப்பதற்கு, கண்டுபிடிப்பாளர்கள் எப்பொழுதும் விண்வெளியை நோக்கியும், சமுத்திரத்தின் அடித்தளத்தை நோக்கியும் செல்கின்றனர். இந்த ஆராய்ச்சிப் பிரயாணங்களில் பங்குபெற முடியாத பலர் கண்டுபிடிப்பதனால் ஏற்படும் கிளர்ச்சியை புத்தகங்களில் இருந்தும், சஞ்சிகைகளில் இருந்தும், மற்றும் தொலைக்காட்சியில் இருந்தும் பெற்றுகொள்ள விரும்புகின்றனர். இன்னும் சிலரோ
சந்திரனுக்குப் போவதைப் பற்றியும் சமுத்திரத்தின் அடித்தளத்திற்கு போவதைப் பற்றியும் கற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். புதிய கண்டுபிடிப்புகளை கண்டுகொள்வதற்கான உண்மையான தேவை எப்பொழுதும் மக்களிடம் இருப்பதை இதிலிருந்து நம்மால் அறிய முடிகிறது.
எந்த ஒரு மனிதனும், எந்த ஒரு சூழ்நிலையில் இருந்தாலும் பயனடையக்கூடிய ஒரு கண்டுபிடிப்பைப் பற்றி மகராஜி அவர்கள் உலகெங்கும் சென்று உரையாற்றி வருகின்றார். அவர் ஒவ்வொரு மனிதனின் உள்ளேயும் கண்டுகொள்ளப்படாத ஒரு இடத்தைப் பற்றியும், அங்கே கண்டு கொள்ளப்படுவதற்காகக் காத்திருக்கும் அமைதியைப் பற்றியும் உரையாற்றுகின்றார். மகராஜி தங்கள் உள்ளே அந்த நிரந்தரமான அமைதியை உணர விரும்புகிறவர்களுக்கு செயல்முறையான ஒரு வழியை காண்பித்துகொடுக்கிறார்.
“அமைதி ஒரு புத்தகத்திலோ, ஒரு இடத்திலோ, ஒரு மலை உச்சியிலோ இல்லை, ஆனால் அது ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் குடிகொண்டிருக்கிறது. அதை கண்டுகொள்ள வேண்டும். மனிதர்கள் என்ற ரீதியில் நமது பிரதான கனவு என்னவாக இருக்கவேண்டும்? நமக்குள்ளே உள்ள அந்த அமைதியை கண்டுகொண்டு அதை அனுபவிக்க வேண்டும் என்பதேயாகும்,” என மகராஜி கூறுகின்றார்.
இந்த வாழ்வு கண்டுகொள்வதைப் பற்றியது. உங்கள் உயிரைக் கண்டுகொள்வதைப் பற்றியது. உண்மையான ஆனந்தத்தை கண்டுகொள்வதைப் பற்றியது. இதை புரிந்து கொள்வதற்கும், உங்களை நிறைவு செய்து கொள்வதற்கும் உங்களுக்கு தரப்பட்டிருக்கும் சந்தர்ப்பமானதுதான் இந்த வாழ்வாகும்.
மக்கள் கேட்ட சில கேள்விகளுக்கு அவர் இவ்வாறு பதிலளித்திருக்கிறார்.
கேள்வி: என்னைச் சுற்றியுள்ள உலகை ஆராய்வதை நான் மிகவும் விரும்புகின்றேன். வெளியே மிகவும் அழகான விஷயங்கள் இருக்கும்பொழுது நான் எதற்காக என்னுள்ளே கவனத்தை செலுத்த வேண்டும்?
பதில்: மக்கள் சூரிய அஸ்தமனத்தைப் பார்த்து “அது மிகவும் அழகாக உள்ளது” எனக் கூறுவது இயற்கை. நான் கூறுவது என்னவென்றால் சூரிய அஸ்தமனத்தை விட, சந்திரோதயத்தை விட மற்றும் எல்லா மலைகளையும் விட உங்களால் ஒரு போதும் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு மிகவும் அழகான ஒரு பொருள் உங்கள் உள்ளே உள்ளது என்றுதான். அதுதான் இந்த வாழ்வு.
இந்த வாழ்வின் கதை உங்களிடமிருந்து ஆரம்பித்து, உங்களுடனேயே முடிவடையும். நீங்கள் செல்லும் இப்பாதையில் வேறு எவரும் வரப் போவதில்லை. இந்தப் பயணத்தில் நீங்கள் தான் ஒரே பிரயாணி. இதன் ஆனந்தத்தையும் அழகையும் நீங்கள் மட்டுமே அனுபவிக்க முடியும்.
கேள்வி: எனக்குள்ளே கவனத்தை செலுத்தும் பிரயாணம் அழகானது என நீங்கள் விளக்குகின்றீர்கள். நான் கற்பனை செய்ததோ அமைதியை உணர்வது ஒரு விதத்தில் மனசலிப்பை ஏற்படுத்தும், ஆனந்தத்தை அளிக்காது என்றுதான். நான் எப்பொழுதும் குதூகலமாக இருக்கவே விரும்புகிறேன்.
பதில்: உங்களுக்கு குதூகலமாக இருக்கவா விருப்பம்? டிஸ்கோ தாளத்திற்கு நீங்கள் நடனமாட விரும்புகின்றீர்களா? டிஸ்கோவானது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் முடிவடைந்துவிடும். ஒருபோதும் முடிவடையாத, இரவும் பகலும், ஒரு நாளில் இருபத்து நான்கு மணி நேரமும், ஒரு வாரத்தில் ஏழு நாட்களும், ஒரு வருடத்தில் முன்னூற்று அறுபத்து ஐந்து நாட்களும் அரங்கேறிக்கொண்டிருக்கும் டிஸ்கோ ஒன்று உங்களுக்குள்ளே உள்ளது. ஒவ்வொரு பருவ காலத்திலும் அது அங்கே இருக்கிறது. மழைபெய்யும் போதும், இடி இடிக்கும்போதும், மின்னல் மின்னும் போதும், வெள்ளப் பெருக்கின்போதும், அல்லது நில நடுக்கத்தின் போதும் அந்த இசையானது இசைப்பதை நிறுத்துவதில்லை. உங்களுக்கு உண்மையான குதூகலம் தேவையாயின் உங்கள் உள்ளத்துடன் நடனமாடத் தொடங்குங்கள். அதுதான் உண்மையான குதூகலம்.
கேள்வி: “உங்களையே நீங்கள் அறிந்துகொள்வது சாத்தியம்” என்று கூறும்போது நீங்கள் எதை குறிப்பிட்டு கூறுகிறீர்கள்?
பதில்: நான் தய்வானில் இருந்தபோது ஒரு புத்தகத்தை படித்தேன். அதில் “உங்கள் நண்பர்களைப் புரிந்துகொள்வது மிகவும் புத்திசாலித்தனமாகும், ஆனால், உங்களையே அறிந்துகொள்வது விவேகமாகும்,” என எழுதப்பட்டிருந்தது.
உண்மையிலேயே நீங்கள் நினைப்பதைவிட மேலும் ஒன்று உங்கள் உள்ளே இருக்கிறது. இன்னமும் திறக்கப்படாத ஒரு பக்கம் உங்கள் உள்ளத்தின் உள்ளே இருக்கலாம், இன்னும் கண்டுபிடிக்கப்படாத சுரங்கம் ஒன்று அங்கே இருக்கலாம். இந்த மாளிகையில் நீங்கள் பார்க்காத இன்னுமொரு அறை அங்கே இருக்கலாம்,
எனவே, உங்களையே நீங்கள் அறிந்துகொள்ள விரும்பினால், இந்த உயிர் வாழ்வை கண்டு கொள்வதிலிருந்துதான் அது ஆரம்பிக்கவேண்டும், உங்கள் உள்ளத்தை கண்டுகொள்வதிலிருந்துதான் அது ஆரம்பிக்கவேண்டும். அனைத்தையும் அறிந்துகொண்டால் மட்டுமே ஞானம் கிடைக்குமென மக்கள் எண்ணுகிறார்கள். அது தவறான எண்ணமாகும். உங்களையே நீங்கள் அறிந்துகொள்வதே ஞானமாகும். அதுதான் மெய்ஞானம் என்பதாகும்.
தரை இறக்கல்: PDF
மேலும் அறிய.கீழ் உள்ள அகப்பக்கத்தை பாருங்கள்.
அமைதியை பற்றிய செய்தி.
மார்ச் 17, 2009
மகராஜியைப் பற்றிய ஓர் அறிமுகம்.
“ நாம் எதை தேடுகின்றோமோ அந்தவொன்று நம்முள்ளேயே இருக்கிறது. நாம் அதை சந்தோஷம் என்று அழைக்கலாம், அமைதி என்று அழைக்கலாம், அல்லது உண்மையான அன்பு என்றும் அழைக்கலாம்.”

நாம் அனைவருமே நம் சொந்த வழியில் உள்ளத்தில் நிறைவை தேடுகின்றோம். ஆயினும், நிறைவை தேடுவது என்பது எல்லோருக்கும் பொதுவானதே. நிறைவடைய வேண்டும், திருப்தியடைய வேண்டும் என்ற தேவை, நம் அனைவருக்கும் இயல்பாகவே உள்ளது. ஆனால், எவ்வாறு நாம் இதனை அடைவது? உண்மையிலேயே நாம் நிறைவை அடைகின்றோமா, அல்லது சூழ்நிலைகள் நமக்கு சாதகமாக அமையும் போது மட்டும்தான் நாம் சந்தோஷமாக இருக்கின்றோமா?
மகராஜி தனது பணியை இந்தியாவில் தொடங்கினார். வாழ்க்கையில் நிறைவாக இருக்கவேண்டும் என்பது இந்தப் பூமியில் பிறந்த ஒவ்வொருவருக்கும் உள்ள அடிப்படையான விருப்பமாகும். இந்த விருப்பதை நிஜமாக்குவதற்கு ஒரு விசேஷமான வழியை அவர் வழங்குகின்றார். அதனை ஞானவழிமுறை என்று அழைக்கின்றார். ஆர்வமுள்ளவர்களுக்கு உள்ளிருக்கும் அமைதியோடு தொடர்புகொள்ள அவர் வழங்கும் ஞானவழிமுறையின் நான்கு பயிற்சி முறைகள் உதவுகின்றன. உண்மையான ஆர்வமும் பயிற்சி செய்வதற்கான பிடிமானமும் கொண்டவர்கள் யாராக இருப்பினும் இந்த உன்னதமான உணர்வை அனுபவிக்க முடியும் என்று கூறுகின்றார்.

மகராஜி இச்செய்தியை வழங்கும் முதல் நபரல்ல. அவருக்கு முன்பே அவரின் தந்தை உட்பட பலரும் இதை செய்திருக்கிறார்கள். ராஜ பரம்பரையில் பிறந்த இவருடைய தந்தையான ஸ்ரீ ஹான்ஸ் ஜி மகராஜ் அவர்கள் இந்தியா முழுவதும் இச்செய்தியை வழங்கி வந்தார். தற்போது 88 நாடுகளில் 65 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மனநிறைவையும் சந்தோஷத்தையும் அடைவதற்கு மகராஜியின் உரையை செவிமடுத்து வருகிறார்கள். அவரின் இந்த செய்தி 60 மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகிறது.
மகராஜி இந்தியாவில் உள்ள ஹரிட்துவார் எனும் நகரில் 1957-ல் பிறந்தார். அவருக்கு மூன்று வயதாக இருந்தபோதே தன் தந்தையார் உரையை செவிமடுக்க வந்திருந்த பெரும் கூட்டத்தில் உரையாற்றத் தொடங்கினார். அவரது தந்தையாரின் மறைவுக்குப் பிறகு, எட்டு வயது நிரம்பிய மகராஜி இச்செய்தியை தொடர்ந்து வழங்கி வருகிறார்.
தனது இளம் வயதிலிருந்தே இந்தியாவில் பெரிய கூட்டங்களில் தொடர்ந்து உரையாற்றி வந்தார். தமது 13-வது வயதில் லன்டனிலும் லோஸ் எஞ்லஸ்சிலும் உரையாற்ற அழைக்கப்பட்டார். டெல்லியில் மூன்று லட்சம் மக்களாக இருந்தாலும், கோலாலம்பூரில் இரண்டாயிரம் மக்களாக இருந்தாலும், அல்லது பேங்கோக்கில் ஐ.நா மண்டபத்தில் இருநூறு பேராக இருந்தாலும் அவர் உலகில் வாழும் எல்லா தரப்பிலும் உள்ள மக்களின் நாடு, இனம், மதம் மற்றும் கலாச்சார பேதம் பாராமல் உரையாற்றி வருகின்றார்.
மிகவும் உன்னதமான ஒன்றைப் பற்றி எளிமையாக உரையாற்றுவதற்கு அவரிடம் ஒரு விசேஷத்தன்மை இருக்கிறது. பலதரப்பட்ட மக்களின் உள்ளத்தை தொடவும் அவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் அவருடைய செய்தியை எளிமையாக வைத்திருப்பதும் அவரின் ஆற்றலாகும்.
“நான் மக்களிடம் வெறும் வார்த்தைகளை மட்டும் கூறவில்லை. ஆனால் அகத்தினுள்ளே கவனத்தை திருப்பி அங்கிருக்கும் அழகை அனுபவிக்க ஒரு வழியையும் கற்றுகொடுக்கின்றேன். நான் அந்த அழகை உருவாக்கவில்லை. இது வெரும் கற்பனையல்ல, எண்ணங்களினாலும் வருவதல்ல. இது உங்கள் உள்ளேயே இருக்கிறது. உள்ளிருக்கும் அந்த உணர்வோடு தொடர்பை ஏற்படுத்தும் ஒரு செயல்முறையான வழி இல்லாவிட்டால், என் வார்த்தைகள் அர்த்தமற்றதாகிவிடும்,” என்று மகராஜி கூறுகின்றார்.
அவரின் செய்தியால் கவரப்பட்ட மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருந்தாலும், சிரமம் பாராமல் அவர் தொடர்ந்து மேலும் பல இடங்களுக்குச் சென்று உரையாற்றி வருகின்றார். பலவிதமான பதிப்பீடுகள், இணையதளங்கள், சீடிக்கள், வீசிடிக்கள், டிவீடிக்கள், அனைத்துலக நிகழ்ச்சிகள் மற்றும் துணைக்கோள நிகழ்ச்சிகள் வாயிலாக மக்கள் அவருடைய செய்தியை அறிந்துகொள்கிறார்கள்.
மேலும் அறிய.கீழ் உள்ள அகப்பக்கத்தை பாருங்கள்.
அதிக நேரம் கணினிமுன் உட்காருகிறீர்களா?
மார்ச் 6, 2009நீண்ட நேரம் கணினி முன் அமர்ந்திருப்பதால் தீவிர கழுத்து வலியை உருவாக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளும், பதினெண் பருவத்தினரும் அதுபோன்று அதிக நேரம் கணினி முன் அமர்ந்திருப்பதால், கழுத்து வலிக்கு ஆளாகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளம் வயதினருக்கு தலைவலி மற்றும் கழுத்துவலி அதிக அளவில் பரவி வருவதற்கு கணினி முன் அமர்வதே என்பது ஆராய்ச்சி மூலம் தெரிய வந்துள்ளது.
ஆஸ்திரேலியாவிலும், அதனைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவிலும் சுமார் ஆயிரத்து 73 உயர் நிலைப்பள்ளி மாணவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின்படி அதிக நேரம் கணினியை பயன்படுத்துவதால் இந்த பாதிப்புகள் ஏற்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எவ்வளவு மணி நேரம் கணினி முன் மாணவர்கள் அமர்ந்துள்ளனர் என்பது குறித்தும், தலைவலி, கழுத்து வலி ஏற்படுவோரின் விகிதம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 50 விழுக்காட்டினருக்கு மேல் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பள்ளியில் சேரும் மாணவர்களில் வாரத்திற்கு 9 மணி நேரம் அல்லது அதற்கு மேற்பட்ட நேரத்திற்கு கணினி முன் அமர்ந்திருப்போரே என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வாரத்திற்கு 5 மணி நேரம் அல்லது அதற்கும் குறைவான நேரத்திற்கு கணினி முன் அமர்ந்திருப்போரில் 16 விழுக்காடு மாணவர்களுக்கு கழுத்து வலி இருப்பது தெரிய வந்துள்ளது. வாரத்திற்கு 25 முதல் 30 மணி நேரம் வரை கணினி முன் அமர்ந்திருப்போரில் 48 விழுக்காட்டினர் கழுத்து வலியால் அவதிப்படுவதாகத் தெரிய வந்துள்ளது.
எனவே இதுபோன்ற தகவல்களில் இருந்து பள்ளி மாணவர்கள் எவ்வளவு மணி நேரம் கணினி முன் அமர்ந்திருக்க வேண்டும் என அவர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.
நன்றி.
போட்டோ கிரபிக்ஸ்
மார்ச் 2, 2009
போட்டோ கிரபிக்ஸ்.

போட்டோ கிரபிக்ஸ்.

போட்டோ கிரபிக்ஸ்.

போட்டோ கிரபிக்ஸ்.

போட்டோ கிரபிக்ஸ்.
Amalan பதிப்பித்தது.
Amalan பதிப்பித்தது.
Amalan பதிப்பித்தது. 







